1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Central Minister says next education year will be partially online class

வரும் கல்வியாண்டில் முழுவதும் ஆன்லைன் வகுப்பா? – மத்திய அமைச்சர் விளக்கம்!

National
கொரோனா காரணமாக தற்போது பள்ளி, கல்லூரி வகுப்புகள் ஆன்லைன் மூலமாக நடந்து வரும் நிலையில் அடுத்த கல்வி ஆண்டு முழுவதும் ஆன்லைன் வகுப்பாக மாற்றப்படுமா என்பது குறித்து மத்திய அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா காரணமாக பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரி வகுப்புகள் மற்றும் தேர்வுகள் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டிலும் முழுவதும் ஆன்லைன் வகுப்புகளே நடைபெறலாம் என தகவல்கள் வெளியான நிலையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அதில் அடுத்த கல்வி ஆண்டில் முழுவதும் ஆன்லைன் வகுப்புகளாக நடத்த வாய்ப்பில்லை. ஆன்லைன் மற்றும் நேரடி வகுப்புகள் இரண்டும் கலந்து நடத்தப்படலாம் என கூறியுள்ளார். மேலும் மத்திய அரசின் ஜெஇஇ போன்ற தேர்வுகளையும் பிராந்திய  மொழிகளிலேயே நடத்தவும், பல்வேறு தொழிற்கல்வியையும் பிராந்திய மொழிகளில் கொண்டு வர திட்டம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.’
அடுத்த கட்டுரையில்
ஏர் இந்தியாவின் 100% பங்குகளை வாங்க டாடா தீவிரம்!