1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 28 மார்ச் 2023 (17:38 IST)

ஜல்லிக்கட்டை அங்கீகரிக்கவில்லை: மத்திய அமைச்சர் கருத்தால் தமிழக மக்கள் அதிர்ச்சி..!

ஜல்லிக்கட்டை அங்கீகரிக்கவில்லை என மத்திய விளையாட்டு துறை அமைச்சர் தெரிவித்த கருத்து தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடைவிதித்தபோது சென்னை மெரினா கடற்கரையில் சரித்திர சாதனை வாய்ந்த போராட்டம் நடைபெற்றது என்பதும் இந்த போராட்டம் காரணமாக அப்போதைய முதல்வர் ஓ பன்னீர் செல்வம் முயற்சியால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க சிறப்பு சட்டம் இயற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக்சிங் தாகூர் ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டி பந்தயத்தை எந்த திட்டத்தின் மேலும் மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். 
 
மேலும் கிராம வீரர்களை ஊக்குவிக்கும் கேலோ இந்தியா விளையாட்டு உள்ளிட்ட எந்த திட்டத்தின் கீழ் ஜல்லிக்கட்டு இல்லை என்றும் ஜல்லிக்கட்டு மாட்டுவண்டி பந்தயத்தை ஊக்குவிக்கும் திட்டமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்
 
Edited by Siva