கொரோனா இல்லா புது வருடம்; தடுப்பூசி போடுவது எப்போ?! – மத்திய அரசின் மகிழ்ச்சி அறிவிப்பு!

Prasanth Karthick| Last Modified திங்கள், 21 டிசம்பர் 2020 (08:42 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் 1 கோடியை தாண்டியுள்ள நிலையில் இந்தியாவில் தடுப்பூசி போடப்படும் நாள் குறித்து மத்திய அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளால் கடந்த மார்ச் மாதம் முதலாக ஊரடங்கு இருந்து வந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியை தாண்டியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான திட்டங்கள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்திய மக்களுக்கு எப்போது தடுப்பூசி கிடைக்கும் என்பது குறித்து பேசியுள்ள மத்திய அமைச்சர் ”மாநில அரசுகளுடன் இணைந்து மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளுக்காக 20 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கும்” என தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :