புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 21 டிசம்பர் 2020 (08:29 IST)

இத்தாலியிலும் புதிய கொரோனா நபர்கள்! – கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நிறுத்தம்!

இங்கிலாந்தில் கொரோனா வைரஸின் மேம்பட்ட அறிகுறிகளுடன் நபர்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இத்தாலியிலும் அத்தகைய நபர்கள் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் பல லட்சம் மக்கள் இறந்துள்ளனர். பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் இறுதி நிலையில் உள்ளன. இந்நிலையில் லண்டனில் சிலருக்கு கொரோனாவின் புதிய மேம்பட்ட தொற்று இருப்பது தெரிய வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்காக அளிக்கப்பட்ட தளர்வுகள் திரும்ப பெறப்பட்டு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் லண்டனில் இருந்து இத்தாலி சென்ற சிலருக்கும் புதிய வகை கொரோனா அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மீண்டும் ஐரோப்பாவில் கொரோனா தாக்கம் புதிய விஸ்வரூபம் எடுப்பதால் பரபரப்பு எழுந்துள்ளது.