செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 20 டிசம்பர் 2020 (18:35 IST)

தேன் படத்தின் விநியோக உரிமையைக் கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

இந்தியன் பனோரமாவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தேன் திரைப்படத்தின் விநியோக உரிமையை டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்தியன் பனோரமாவுக்கு இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் இருந்து அசுரன் மற்றும் தேன் ஆகிய இரு படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அசுரன் படத்தைப் பற்றி எல்லா தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் தெரியும். ஆனால் இந்த தேன் என்ற படம் ரசிகர்களை எதிர்பார்க்க வைத்துள்ளது.

குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் காட்சி சமீபத்தில் நடைபெற்றுள்ளது. படத்தின் தரத்தின் மேல் உள்ள நம்பிக்கையால் ரிலீஸ் தேதி அறிவிக்கும் முன்னரே தைரியமாக பத்திரிக்கையாளர் காட்சியை ஏற்பாடு செய்துள்ளனர். அது மட்டுமில்லாமல் இந்த படத்தின் மீதான நம்பிக்கையால் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் விநியோக உரிமையை வாங்கியுள்ளது.