1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 1 டிசம்பர் 2021 (12:15 IST)

விவசாய போராட்டத்தில் விவசாயிகள் யாரும் பலியாகவில்லை: அமைச்சரின் சர்ச்சை கருத்து!

டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் விவசாயிகள் யாரும் பலியாகவில்லை என அமைச்சர் பாராளுமன்றத்தில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மத்திய அரசு அமல்படுத்திய 3 வேளாண்மை சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் கடந்த ஒரு ஆண்டாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர் என்பதும் இந்த போராட்டத்தின் பயனாக மூன்று மசோதாக்களும் திரும்பப் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த போராட்டத்தின்போது 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பலியானதாக கூறப்படும் நிலையில் விவசாயிகள் போராட்டத்தில் விவசாயிகள் யாரும் பலியாகவில்லை என விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர தோமர் அவர்கள் கூறியுள்ளார்
 
விவசாய போராட்டத்தில் பலியானவர்களுக்கு நிவாரணம் கேட்டு எதிர்க்கட்சிகள் வைத்த கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதில் அளித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது