திங்கள், 4 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (12:01 IST)

இதெல்லாம் நடைமுறைக்கு உதவாது; 1,486 சட்டங்கள் நீக்கம்! – நிதியமைச்சர் அறிவிப்பு!

மத்திய அரசின் ஆண்டு பட்ஜெட்டை வெளியிட்டு வரும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 1,486 சட்டங்கள் நீக்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் தற்போது தொடங்கியுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார்.

அதில், பணம் செலுத்துவதில் ஏற்படும் தாமதத்தைக் குறைக்க அனைத்து அமைச்சகங்களும் பயன்படுத்தும் வகையில் ஆன்லைன் பணம் செலுத்தும் திட்டம் தொடங்கப்படும்

ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்க அனுமதி

மின்சார வாகனங்களுக்காக ஊரகப்பகுதிகளில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும்

நடைமுறைக்கு ஒவ்வாத 1,486 சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளது, இது வர்த்தகம் புரிவதை எளிதாக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.