மாநில மொழிகளில் 200 கல்வி சேனல்கள், நதிநீர் இணைப்பு..! – ஈர்க்கும் பட்ஜெட் அறிவிப்புகள்!
மத்திய அரசின் 2022-23 ஆண்டுக்கான பட்ஜெட் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் சில அறிவிப்புகள் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
நாடாளுமன்றத்தில் 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் தற்போது தொடங்கியுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார்.
அதில் பல அறிவிப்புகள் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளன. அவற்றில் சில…
சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் 60 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்தியா முழுவதும் 400 வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்படும்.
போக்குவரத்து, உள்கட்டமைப்பு வசதிகளுக்கு முன்னுரிமை
ரூ.44 ஆயிரம் கோடியில் நீர்பாசன வசதிகள் ஏற்படுத்தப்படும்
கோதாவரி – பெண்ணாறு – காவிரி உள்ளிட்ட 5 நதிகளின் இணைப்புக்கான விரிவான திட்ட அறிக்கை இறுதி செய்யப்படும்.
அடுத்த நிதியாண்டில் 22 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை வசதிகளை மேம்படுத்தப்படும்
1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாநில மொழிகளில் 200 கல்வி சேனல்கள் புதிதாக தொடங்கப்படும்.
ஒன்றரை லட்சம் தபால் நிலையங்களில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அறிமுகப்படுத்தப்படும்.
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் 18 லட்சம் வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு