பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பு – மீண்டும் வரியை உயர்த்திய மத்திய அரசு !
மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை 8 ரூபாய் வரை உயர்த்திக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விற்பனைக்கு ஏற்ப நாள்தோறும் விலை நிர்ணயம் செய்யும் முறையை இந்திய எரிபொருள் எண்ணேய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பீதியால் கச்சா எண்ணெய் விலைக் கடுமையாக குறைந்து வருகிறது. அதனால் பெட்ரோல் விலையும் குறைந்து வருகிறது.
இதனால் மேலும் 5 முதல் 6 ரூபாய் விலை குறையும் என எதிர்பார்த்திருந்த நிலையில் மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 3 ரூபாய் வரை உயர்த்தி இருந்தது. இந்நிலையில் இப்போது மக்களவையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை எதிர்காலத்தில் 10 ரூபாய் வரை உயர்த்திக்கொள்ள மத்திய அரசு உத்தரவு அளித்துள்ளது.
இது சம்மந்தமான மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் ஏற்கனவே உள்ள வரி உயர்வு வரம்பை சேர்த்து பெட்ரோலுக்கு ரூ 18ம் டீசலுக்கு ரூ 12 ம் அதிகமாகியுள்ளது. இதனால் மீண்டும் பெட்ரோல் விலை அதிகமாகலாம் என சொல்லப்படுகிறது.