திடீரென கரையை கடக்கும் காற்றழுத்த மண்டலம்! – வட மாநிலங்களுக்கு எச்சரிக்கை!
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் முன்னரே கரையை கடக்க இருப்பதால் வட மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை காலம் நெருங்கியுள்ள நிலையில் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகி வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் ஒடிசா அருகே வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.
இந்நிலையில் தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடகிழக்கு நோக்கி நகர்ந்து வருவதால் இன்று நண்பகல் நேரத்தில் மேற்கு வங்கம் அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் மிசோரம், அசாம், மேகாலயா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் அதீத கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.