திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 1 ஏப்ரல் 2021 (08:12 IST)

மோகன் லால் இயக்கும் படத்தில் நடிக்கிறாரா அஜித்? மலையாள சினிமாவில் தீயாக பரவிவரும் செய்தி!

நடிகர் மோகன்லால் முதல் முதலாக பர்ரோஸ் என்ற படத்தை இயக்க உள்ளார்.

நடிகர் மோகன்லால் பர்ரோஸ் என்ற 3 டி படத்தை இயக்கி அதில் பர்ரோஸ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் இந்தியாவுக்கு வந்து செல்வங்களை சேர்த்த வாஸ்கோடகாமாவின் சொத்துகளைப் பாதுகாத்த பர்ரோஸ் என்பவரை பற்றியது. முக்கியக் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்க பிருத்விராஜும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் அஜித் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க போவதாக சில இணையதளங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால் அதைப் படக்குழு முற்றிலுமாக மறுத்துள்ளது.