செவ்வாய், 6 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 24 ஜனவரி 2022 (20:13 IST)

மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1000: விண்ணப்பம் செய்வது எப்படி?

மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1000: விண்ணப்பம் செய்வது எப்படி?
9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட இருக்கும் நிலையில் அது குறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 
 
9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியருக்கு மாதம்தோறும் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. 
 
இதில் பயன்பெற தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். மார்ச் மாதம் 5-ஆம் தேதி நடைபெற உள்ள இந்த தேர்வுக்கு இம்மாதம் 27ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்
 
http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து, விண்ணப்பத்தை நிரப்பி பள்ளியில் அளிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது