மத்திய அரசின் உணவை வேண்டாம் என சொன்ன விவசாயிகள் – பேச்சுவார்த்தையில் நடந்த சம்பவம்!
மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையில் விவசாயிகள் மத்திய அரசு கொடுத்த உணவை விவசாயிகள் வாங்க மறுத்துள்ளனர்.
டெல்லியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த போராட்டத்திற்கு இந்திய அரசியல் கட்சிகள் மட்டுமன்றி கனடா பிரதமரும் கொடுத்தார் என்பதும், இந்த போராட்டம் காரணமாக டெல்லியே ஸ்தம்பித்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மத்திய அரசு விவசாயிகளின் பிரதிநிதிகளோடு பேச்சுவார்த்தையில் நேற்று ஏற்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் மத்திய அரசு சார்பில் வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் பஞ்சாப்பின் மக்களவை உறுப்பினர்கள் சிலர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையின் இடையே விவசாயிகளுக்கு மத்திய அரசு சார்பில் உணவு வழங்கப்பட இருந்தது. ஆனால் அதை மறுத்த விவசாயிகள் தாங்களே கொண்டு வந்த உணவை சாப்பிட்டுள்ளனர்.
பேச்சுவார்த்தையில் விவசாயிகள் தங்கள் கோரிக்கையை ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.