வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 3 டிசம்பர் 2020 (19:52 IST)

விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபல தமிழ் நடிகர்!

டெல்லியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த போராட்டத்திற்கு இந்திய அரசியல் கட்சிகள் மட்டுமன்றி கனடா பிரதமரும் கொடுத்தார் என்பதும், இந்த போராட்டம் காரணமாக டெல்லியே ஸ்தம்பித்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக அவ்வப்போது குரல் கொடுத்து வரும் நடிகர் கார்த்திக் இதுகுறித்து இந்த போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளார் 
 
போராடும் விவசாயிகளுக்கு செவிசாய்த்து அவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அவர்கள் சுதந்திரமாக தொழில் செய்வதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு என்றும் அதை அரசு தாமதிக்காமல் செய்ய வேண்டும் என்றும் நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். இதோ அவருடைய அறிக்கை: