அதிக விலைக்கு இந்த மாஸ்க்கை வாங்காதீங்க!? – மத்திய அரசு அறிவுறுத்தல்

Masks
Prasanth Karthick| Last Modified செவ்வாய், 21 ஜூலை 2020 (15:42 IST)
கொரோனா தொற்றை தடுக்க அதிக விலை கொண்ட எந்95 முகக்கவசங்களை வாங்க வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதால் மக்கள் முகக்கவசங்கள் அணிவது கட்டாயமான நடைமுறையாக பின்பற்றப்பட்டு வருகிறது. மக்கள் பலர் அதிக செலவில் இல்லாமல் குறைந்த விலை கொண்ட துணியால் ஆன முகமூடிகளையே பயன்படுத்தி வருகின்றனர். எனினும் ஒரு சிலர் அதிக விலை கொடுத்து என் -95 வகை வால்வு முகமூடிகளை வாங்கி அணிந்து வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு பரிந்துரை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் வால்வுகள் கொண்ட முகக்கவசங்களால் கொரோனாவை எந்த வகையிலும் தடுக்க இயலாது. துணிகளால் ஆன முகக்கவசங்களே போதுமானது. எனவே வால்வுகள் கொண்ட முகக்கவசங்களை மக்கள் தவிர்ப்பதை உறுதிப்படுத்த வேண்டும்” என அந்த பரிந்துரையில் கூறப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து விரைவில் மாநில அரசுகள் விரிவான விதிமுறைகளை விளக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :