ஊரடங்கை மீறி ஆடல் பாடல் நிகழ்ச்சி! – வைரலான வீடியோவால் நடவடிக்கை!

Bihar
Prasanth Karthick| Last Modified செவ்வாய், 21 ஜூலை 2020 (15:24 IST)
பீகாரில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் 11 லட்சத்தை தாண்டியுள்ளது. பீகாரில் 27,646 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 17,433 பேர் குணமடைந்துள்ளனர். 217 பேர் பலியான நிலையில் 9996 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமாரின் உறவினர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த மாத இறுதி வரை அங்கு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பீகார் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நாளந்தாவில் அரசின் விதிமுறைகளை மீறி ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் பலரும் கலந்து கொண்டு கொண்டாடிய நிலையில் இதுகுறித்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. அதை தொடர்ந்து நடவடிக்கை எடுத்த போலீஸார் ஆடலும் பாடலும் ஏற்பாடு செய்த 10 பேரை கைது செய்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :