1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 8 ஏப்ரல் 2020 (12:46 IST)

உணவுப்பொருட்களை பதுக்கினால் நேரடியாக சிறைதான்! – எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு!

ஊரடங்கு உத்தரவை சாக்காக கொண்டு உணவுப்பொருட்களை பதுக்கினால் சிறை தண்டனை வழங்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். அத்தியாவசிய பொருட்கள் விற்பதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் மட்டும் வாங்க கடைகளுக்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் சில இடங்களில் அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதாகவும், அதிக விலைக்கு விற்பதாகவும் மத்திய அரசுக்கு தகவல் வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து உடனடி நடவடிக்கை எடுத்துள்ள மத்திய அரசு மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அதன்படி மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அன்றாடம் கிடைப்பதை உறுதிப்படுத்த மாநில அரசுகளுக்கு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தடை உத்தரவை பயன்படுத்தி அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.