1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 3 பிப்ரவரி 2021 (14:32 IST)

கொஞ்சம் பேர்தான்மா போராடுறாங்க.. நாங்க பாத்துக்குறோம்! – க்ரேட்டா தன்பெர்கிற்கு மத்திய அரசு பதில்!

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு க்ரேட்டா தன்பெர்க் ஆதரவளித்த நிலையில் போராட்டம் குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவது உலகளவில் கவனம் பெற்றுள்ளது. முன்னதாக அமெரிக்க பாப் பாடகர் ரிஹானா வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து பார்ன் நடிகை மியா கலீபாவும் ஆதரவாக ட்வீட் பதிவிட்ட நிலையில், சுற்றுசூழல் செயற்பாட்டாளர் சிறுமி க்ரேட்டா தன்பெர்கும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் க்ரேட்டா தன்பெர்கிற்கு பதிலளித்துள்ள மத்திய அரசு ”வேளாண் சட்டங்களுக்கு எதிராக இந்தியாவில் சிறிய அளவிலான விவசாயிகளே போராட்டம் நடத்தி வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளது,