செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 3 பிப்ரவரி 2021 (13:25 IST)

நானும் டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவு தரேன்! – மியா கலீபா ட்வீட்!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராடி வரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து மியா கலீபா ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவது உலகளவில் கவனம் பெற்றுள்ளது. முன்னதாக அமெரிக்க பாப் பாடகர் ரிஹானா வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பிரபல பார்ன் நடிகையான மியா கலீபா விவசாயிகளுக்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் “சம்பளத்திற்கு நடிப்பவர்களா? இவர்கள் இந்த அவார்ட் சீசனில் கவனிக்கப்படமாட்டார்கள். நான் விவசாயிகளுக்கு ஆதரவளிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.