ஈரான் போர் எதிரொலி!.. ஜூன் 30ம் தேதி வரை வரி விலக்கு!.. விலைவாசி கட்டுக்குள் வருமா?..
ஈரான் நாட்டின் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி போரை துவங்கிய நிலையில் ஒரு மாதத்திற்கு மேல் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இரண்டு நாடுகலிலும் சேதம் ஏற்பட்டிருக்கிறது. இஸ்ரேல் தாக்கியதில் ஈரானின் முக்கிய தலைவர் கமேனி குடும்பத்தோடு கொல்லப்பட்டார். இதையடுத்து அமெரிக்காவுக்கு உதவி செய்யும் வளைகுடா நாடுகளான அபுதாபி, பஹ்ரைன், சவுதி அரேபியா, துபாய் போன்ற வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத்தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதலை நடத்தி வருகிறது..
இதன் காரணமாக உலகெங்கும் கச்சா எண்ணெய் செல்வது தடைப்பட்டிருக்கிறது. ஏனெனில் இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட கச்சா எண்ணையை வளைகுடா நாடுகளில் இருந்துதான் வாங்குகிறது. தற்போது கச்சா எண்ணெய் கிடைக்காததால் இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் ஹோட்டல்களை மூடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. வணிக சிலிண்டர் சிலிண்டர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிட்டது.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் பாதுகாப்பு கவுன்சில் அவசரக்கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மத்திய கிழக்கு போரால் ஏற்படும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க 41 பெட்ரோல் கெமிக்கல் பொருட்களுக்கான இறக்குமதி வரியை ஜூன் 30ம் தேதி வரை ரத்து செய்வதாக பாஜக அரசு அறிவித்திருக்கிறது. இதன்மூலம் பிளாஸ்டிக், பேக்கேஜிங், ஜவுளி, மருந்துகள், வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் துறைகள் பெருமளவில் பயனடையும் என்றும் நாட்டில் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.