மத்திய பட்ஜெட் பற்றி அறிய புதிய செயலி – மத்திய அரசு அறிமுகம்!

Budget app
Prasanth Karthick| Last Modified சனி, 30 ஜனவரி 2021 (09:02 IST)
மத்திய அரசின் ஆண்டு பெட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் பட்ஜெட் விவரங்களை தெரிந்து கொள்ள புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசின் 2021 – 2022ம் ஆண்டிற்கான ஆண்டு பட்ஜெட் தொடர் கூட்டம் தொடங்கி நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதன் மீதான விவாதங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு பிறகு பிப்ரவரி 2ம் தேதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில் பட்ஜெட் தாக்கல் குறித்த அனைத்து விவரங்களையும் மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் மத்திய அரசு புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. யூனியன் பட்ஜெட் என்ற அந்த செயலியின் மூலமாக மத்திய அரசு அறிவித்துள்ள பட்ஜெட் குறித்த தகவல்கள், சலுகைகள் குறித்த அனைத்து விவரங்களையும் எளிதாக பெற முடியும் என்பதால் இது மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :