செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 29 ஜனவரி 2021 (19:00 IST)

அடுத்தடுத்த நாட்களில் வெளியாகும் இரண்டு பிரபலங்களின் படங்கள்!

அடுத்தடுத்த நாட்களில் வெளியாகும் இரண்டு பிரபலங்களின் படங்கள்!
கடந்த பொங்கல் தினத்தில் அடுத்தடுத்த நாட்களில் மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் ஆகிய திரைப்படங்கள் வெளியான நிலையில் அதே போல் மீண்டும் இரண்டு பிரபலங்களின் படங்கள் அடுத்தடுத்த நாட்களில் வெளியாக உள்ளது 
 
தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகர்களாக இருக்கும் சிரஞ்சீவியின் ஆச்சார்யா மற்றும் வெங்கடேஷின் ‘நாரப்பா’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மெகா ஸ்டார் சிரஞ்சீவி, காஜல் அகர்வால் நடிப்பில் கொரடலா சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ஆச்சார்யா திரைப்படம் மே மாதம் 13ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது என்பதை பார்த்தோம் 
 
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி வெங்கடேஷின் ‘நாரப்பா’ திரைப்படம் மே மாதம் 14 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் தனுஷின் அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது
 
சிரஞ்சீவியின் ஆச்சார்யா மற்றும் வெங்கடேஷின் ‘நாரப்பா’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்த நாட்களில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது