1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 18 அக்டோபர் 2023 (18:03 IST)

ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் எவ்வளவு? மத்திய அமைச்சரவையில் முடிவு..!

south railway
ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ் வழங்கப்படும் என மத்திய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவையில் ரயில்வே ஊழியர்களுக்கான போனஸ் குறித்த ஆலோசனை நடைபெற்றது. 
 
இந்த ஆலோசனையின் முடிவில் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை தீபாவளி போனஸ் ஆக வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 
இதற்காக மத்திய அரசு ரூ.1968 கோடியை ஒதுக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 11 லட்சத்துக்கும் மேலான ரயில்வே ஊழியர்கள் தீபாவளி போனஸ் பெறுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran