1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 16 ஜூன் 2024 (11:22 IST)

மனித விரலை அடுத்து பூரான்.. ஆன்லைன் ஐஸ்க்ரீம் வாங்குவதற்கு அச்சப்படும் பொதுமக்கள்..!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆன்லைனில் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்த ஒருவருக்கு மனித விரலுடன் சேர்ந்து ஐஸ்கிரீம் வந்த புகைப்படம் இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது இன்னொரு நபருக்கு ஆன்லைனில் ஐஸ்கிரீம் வாங்கிய நிலையில் அவருடைய ஐஸ்கிரீமில் பூரான் இருந்ததாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
உத்தர் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நொய்டாவில் வாடிக்கையாளர் ஒருவர் ஆன்லைனில் ஐஸ்க்ரீம் ஆர்டர் செய்த நிலையில் அந்த ஐஸ்கிரீமில் பூரான் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து அதை வீடியோ எடுத்து காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஏற்கனவே ஐஸ்கிரீமில் மனித விரைல் கண்டறியப்பட்ட சம்பவத்தின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தற்போது பூரான் இருக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இதனால் ஆன்லைனில் இனி ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிடவே அச்சமாக இருக்கிறது என்று இந்த இரண்டு செய்திகளையும் பார்த்த பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 
Edited by Siva