1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : வியாழன், 13 ஜூன் 2024 (12:50 IST)

ஐஸ் கிரீமில் கிடந்த மனித விரல்.. ஆன்லைனில் ஆர்டர் செய்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி..!

மும்பையை சேர்ந்த ஒருவர் ஆன்லைனில் ஐஸ்க்ரீம் ஆர்டர் செய்த நிலையில் அந்த ஐஸ்கிரீமை அவர் பிரித்துப் பார்த்தபோது அதில் மனித விரல் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். 
 
தற்போது ஆன்லைனில் ஆர்டர் செய்யும் வழக்கம் அதிகரித்து வரும் நிலையில் உணவுப் பொருள்கள் முதல் அத்தியாவசிய பொருட்கள் வரை ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்டு வருகிறது என்பது தெரிந்தது.
 
இந்த நிலையில் மும்பையை சேர்ந்த ஒருவர் ஆன்லைனில் ஆர்டர் செய்த கோன் ஐஸ்கிரீமில் இரண்டு சென்டிமீட்டர் அளவுக்கு மனிதவிரல் இருந்ததை அடுத்து அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார்.
 
இதை அடுத்த உடனே அவர் விரலை கைப்பற்றி சம்பந்தப்பட்ட ஐஸ்கிரீம் நிறுவனம் மீது  காவல்துறையில் புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
 
ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐஸ்கிரீமில் மனித விரல் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
Edited by Mahendran