வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 31 ஜூலை 2019 (06:59 IST)

ஆபாச இணையதளத்தில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்த காதல் ஜோடியின் வீடியோ: அதிர்ச்சி தகவல்

மெட்ரோ ரயிலில் பயணம் செய்வதற்காக ரயில் நிலையத்தில் காத்திருந்த ஒரு காதல் ஜோடி நெருக்கமாக இருந்த காட்சிகள் ஆபாச இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
 
டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒரு காதல் ஜோடி மெட்ரோ ரயிலுக்காக காத்திருந்தனர். அப்போது அவர்கள் சில சில்மிஷங்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது
 
இந்த காட்சிகளை சிசிடிவியில் இருந்து மொபைல் மூலம் வீடியோ எடுத்த மர்ம நபர் ஒருவர் இந்த வீடியோவை ஆபாச இணையதளம் ஒன்றில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை ஒரே நாளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையில் காதல் ஜோடியின் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் மெட்ரோ நிர்வாக அதிகாரிகளிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
 
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியபோது, ‘வீடியோ பதிவான நாள் மற்றும் நேரத்தை வைத்து இந்த வீடியோவை பதிவேற்றியவர் யார் என்பதை விசாரித்து வருவதாகவும், விரைவில் அந்த நபர் பிடிபடுவார் என்றும் கூறினர். மேலும் காதல் ஜோடிகளும் பொது இடங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் அவர்கள் அறிவுரை கூறியுள்ளனர். பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட அந்த காதல் ஜோடி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் சமூக வலைத்தளங்களில் ஒலித்து வருகிறது