வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 7 ஜூன் 2023 (16:00 IST)

ரயில் விபத்தின்போது பணியில் இருந்த அதிகாரிகளின் செல்போன்கள்: சிபிஐ கைப்பற்றியதால் பரபரப்பு..!

cbi6
ஒரிசா ரயில் விபத்தின்போது பணியில் இருந்த ரயில்வே அதிகாரிகளின் செல்போன்களை சிபிஐ கைப்பற்றி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 சமீபத்தில் நிகழ்ந்த ஒரிசா ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்த நிலையில் இந்த வழக்கை சிபிஐ தற்போது விசாரணை செய்து வருகிறது 
 
நான்கு பிரிவுகளில் ஏற்கனவே இது குறித்து சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் தற்போது விபத்தின் போது பணியில் இருந்த ரயில்வே அதிகாரிகள் சிலரின் செல்போன்களை சிபிஐ பறிமுதல் செய்வதுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
 
ரயில்வே பணியாளர்களின் செல்போன்களில் பதிவாகியுள்ள தொலைபேசி உரையாடல்கள் வாட்ஸ் அப் கால்கள் சமூக ஊடக பயன்பாடு ஆகியவற்றை ஆய்வு செய்யும் பணியின் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரயில் ஓட்டுனரிடமும் சிபிஐ விசாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran