செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 22 பிப்ரவரி 2024 (14:12 IST)

முன்னாள் ஆளுநருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை..! லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில் நடவடிக்கை.!!

governor
லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
 
ஜம்மு காஷ்மீர் ஆளுநராக சத்ய பால் மாலிக் ஆகஸ்ட் 23, 2018 முதல் அக்டோபர் 30, 2019 வரை  பணியாற்றினார்.  இந்த சமயத்தில் இரண்டு கோப்புகளில் கையெழுத்து பெறுவதற்காக தனக்கு ரூ.300 கோடி வரை லஞ்சம் தர முயன்றனர் என்று சத்ய பால் மாலிக் ஏற்கனவே கூறியிருந்தார்.
 
இந்த இரண்டு கோப்புகளில் ஒன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தில் செனாப் ஆற்றில் இருந்து 624 மெகாவாட் நீர் மின் உற்பத்தி திட்டத்துக்கான ஒப்புதல் கோப்பு.  இந்த திட்டத்தில் சத்யபால் மாலிக் லஞ்சம் பெற்றிருக்கலாம் என்று புகார் எழுந்ததை தொடர்ந்து டெல்லி மற்றும் ஜம்மு காஷ்மீரில் உள்ள 8 இடங்களில் கடந்த மாதம் சிபிஐ சோதனை நடத்தியது.
 
cbi raid
இந்தச் சோதனையின் தொடர்ச்சியாக தற்போது சத்யபால் மாலிக்கின் டெல்லி இல்லம் உட்பட அவருக்கு தொடர்புடைய 30 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.


சோதனையின் முடிவில் அவர் லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டால், சிபிஐ அதிகாரிகளால் சத்ய பால் மாலிக் கைது செய்யப்படலாம் என தகவல் தெரிவிக்கின்றன.