1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : சனி, 6 ஜனவரி 2024 (14:00 IST)

வணிகவரித்துறை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை..! சிக்கிய இரு அதிகாரிகள்..!!

raid
புதுச்சேரி வணிகவரித்துறை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜிஎஸ்டி வரி வசிலிப்பில் முறைகேடு செய்த இரு அதிகாரிகள் சிக்கினர்..
 
புதுச்சேரி 100 அடி சாலையில் வணிகவரி வளாகம் இயங்கி வருகிறது. இங்கு நேற்று  மாலை  சென்னையில் இருந்து 3 கார்களில் வந்த சிபிஐ அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில் பெண் அதிகாரி ஒருவரை சென்னை சாஸ்திரி பவனுக்கு அழைத்து சென்று விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. 

ஜிஎஸ்டி வரி வசூலிப்பில் முறைகேடு செய்ததாக  வணிக வரித்துறை அதிகாரிகள் ஆனந்தன், முருகானந்தம் ஆகியோர் மீது ஆதாரங்களுடன் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து அவர்களை இன்று பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பிறகு இருவரையும் சிபிஐ அதிகாரிகள் சென்னைக்கு அழைத்து செல்வார்கள் என தெரிகிறது.
 
வணிக வரி வளாகத்தில் நேற்று மாலை வரையிலும் இன்று காலை முதல்  அலுவலகத்திற்கு உள்பக்கமாக பூட்டு போட்டு இந்த  சோதனை  நடக்கிறது. இதனால்
யாரையும் உள்ளே அனுமதிக்கப்படாததால் வணிக வரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.