புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (15:25 IST)

என் வீட்டில் சிபிஐ., ஐடி அதிகாரிகள் சோதனை செய்யலாம்- துணை முதல்வர் அழைப்பு

Tejaswi Yadav
என் வீட்டில் எத்தனை நாட்கள் வேண்டுமானலும் தங்கிக் கொண்டு சோதனை செய்யலாம் என சிபியை, வரித்துறை அதிகாரிகளுக்கு அழைப்புவிடுத்துள்ளார் துணைமுதல்வர் தேஜஸ்வி.

பீகார் அரசியலில் சில நாட்களாகவே  முதல்வர் நிதிஸ்குமார் தலைமையிலான ஜனதா தள கட்சிக்கும், பிஜேபிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்த நிலையில்,  சமீபத்தில்,  பிஜேபி கூட்டணியில் இருந்து விலகி, முதல்வர் பதவியை நிதிஸ்குமார் ராஜினாமா செய்தார்.

தற்போது, லல்லு பிரசாத் யாதவின் மகனான தேஜஸ்வியின் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியுடன் இணைந்து நிதிஷ்குமார் தற்போது புதிய ஆட்சியை அமைத்து உள்ளார் . இதில், முதலமைச்சராக நிதிஸ்குமாரும், துணை முதலமைச்சராக தேஜஸ்வியும் பதவியேற்றுக் கொண்டனர் .

இந்த  நிலையில், தேஜஸ்வி செய்தியாளர்களிடம்  கூறியதாவது: அமலாக்கத்துறை, ஐடி துறை அதிகாரிகளுக்கு என் வீட்டில் சோதனையிட அழைக்கிறேன். என் வீட்டில் எத்தனை நாட்கள் வேண்டுமானலும் தங்கிக் கொண்டு சோதனை செய்யலாம். 2 மாதம் வருவதற்குப் பதில் இப்போது சரியான நேரம்….முதல்வர் நிதிஸ்குமாராலும் பிரதமராக முடியும் என தெரிவித்துள்ளார்.

இவரது தந்தை லாலு பிரசாதி யாதவ் ஊழல் வழக்கில் சிறையிலுள்ள நிலையில், தேஜஸ்வின் பேச்சு பரபரபை ஏற்படுத்தியுள்ளது.