வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (10:42 IST)

யானைகள் – மனிதர்கள் இடையே மோதலை தடுக்க வேண்டும்! – பிரதமர் மோடி ட்வீட்!

இன்று உலக யானைகள் தினம் கொண்டாடப்படும் நிலையில் யானைகள் பாதுகாப்பின் அவசியம் குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஆண்டுதோறும் ஆகஸ்டு 12ம் தேதி உலக யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் வனப்பகுதிகள் தோன்று செழுமை அடைவதற்கும், பல்வேறு இயற்கை காரணிகளுக்கும் முக்கிய காரணமாக யானைகள் உள்ளன.

ஆனால் நகரமயமாக்கல், காடுகளை அழித்தல் போன்றவற்றால் யானைகளின் வழித்தரம் ஆக்கிரமிப்பு ஏற்பட்டு யானைகள் – மனிதர்கள் இடையே மோதல்கள் அதிகரிக்கின்றன. பல பகுதிகளில் யானைகள் காட்டைவிட்டு வெளியேறுவதும் தொடர்கிறது.

இந்நிலையில் உலக யானைகள் தினத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி “உலக யானைகள் தினத்தில் யானையை பாதுகாப்பதின் நடவடிக்கையை ஆதரிக்கிறோம். உலகில் உள்ள ஆசிய யானைகளில் 60% யானைகள் இந்தியாவில்தான் உள்ளன. கடந்த 8 ஆண்டுகளில் யானைகள் சரணாலயங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதோடு, யானைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

மேலும் மனித – விலங்கு இடையேயான மோதலை குறைப்பதற்கு உள்ளூர் சமூகங்களுடன் இணைந்து சுற்றுசூழல் உணர்வை மேம்படுத்த வேண்டும்” என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.