1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (07:48 IST)

6வது திருமணம் செய்த முன்னாள் அமைச்சர்: போலீசில் புகார் அளித்த 3வது மனைவி!

6வது திருமணம் செய்த முன்னாள் அமைச்சர்: போலீசில் புகார் அளித்த 3வது மனைவி!
6வது திருமணம் செய்த முன்னாள் அமைச்சர் ஒருவர் மீது மூன்றாவது மனைவி காவல் துறையில் புகார் அளித்து இருப்பதை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது
 
உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பஷீர் என்பவருக்கு ஏற்கனவே ஐந்து திருமணங்கள் நடந்து உள்ளது. இந்த நிலையில் அவர் ஆறாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சி செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மூன்றாவது மனைவி நக்மா என்பவர் அவரிடம் சண்டை போட்டதாக தெரிகிறது
 
இதனால் ஆத்திரமடைந்த முன்னாள் அமைச்சர் பஷிர், மூன்றாவது மனைவி நக்மாவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இதனை அடுத்து நக்மா காவல்துறையிடம் சென்று தனது கணவர் மீது புகார் அளித்தார்
 
தனது கணவர் தன்னை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்துவதாகவும், தன்னுடைய அனுமதி இல்லாமலேயே வலுக்கட்டாயமாக உடலுறவு செய்வதாகவும் புகார் அளித்துள்ளார் இந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் பஷீர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் பஷீர் மாயாவதி அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது