வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 26 ஆகஸ்ட் 2020 (16:16 IST)

அவருடன் நான் டூயட் ஆடுவதா? கவுண்டமணியை அவமானப்படுத்திய நடிகை!

நடிகர் கவுண்டமணியோடு மேட்டுக்குடி படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு ஆட நடிகை நக்மா மறுத்ததாக சொல்லப்படுகிறது.

1990 களில் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகையாக இருந்தவர் நக்மா. ரஜினியோடு பாட்ஷா உள்ளிட்ட படங்களில் நடித்த சுந்தர் சி இயக்கத்தில் கார்த்திக் நடித்த மேட்டுக்குடி படத்தில் நடித்திருந்தார். அதில் ஒரு பாடல் காட்சியில் கவுண்டமணியோடு அவர் டூயட் பாடலுக்கு ஆடுவது போல காட்சி அமைத்திருந்தார் இயக்குனர் சுந்தர் சி.

ஆனால் காமெடி நடிகரோடு ஆடினால் தனது மார்க்கெட் போய்விடும் என நினைத்த நக்மா அதற்கு மறுத்துள்ளார். இதையறிந்த கவுண்டமணியும் இனி அந்த படத்தில் நடிக்க மாட்டேன் என சொல்லி கிளம்பியுள்ளார். ஆனால் இருவரையும் சமாதானப்படுத்திய இயக்குனர் எப்படியோ அந்த பாடலை படம்பிடித்துள்ளார். ஆனால் அதன் பிறகு கவுண்டமணியும் நக்மாவும் நண்பர்களாகி விட இன்றுவரை அந்த நட்பு தொடர்கிறது.