புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 28 ஜனவரி 2021 (10:59 IST)

எங்க ஆப் வேணாம்னா, எங்களுக்கு நீங்களும் வேணாம்! – இந்திய ஊழியர்களை நீக்கும் டிக்டாக்!

டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்ட நிலையில் அந்நிறுவனங்களில் பணிபுரியும் இந்திய ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியா – சீனா எல்லை பிரச்சினை தொடங்கிய நிலையில் இதுநாள் வரை பல சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதில் டிக்டாக், ஹலோ உள்ளிட்ட முக்கிய ஆப்களும் அடக்கம். இந்நிலையில் இந்தியாவில் செயல்பட அனுமதி கோரி அந்த நிறுவனங்கள் கேட்டு வந்த நிலையில் டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகள் நிரந்தரமாக இந்தியாவில் தடை செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் டிக்டாக் உள்ளிட்ட தனது நிறுவன செயலிகளுக்காக பணிபுரியும் இந்திய ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட் டேன்ஸ் முடிவெடுத்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.