புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 18 ஜனவரி 2021 (11:43 IST)

பட்ஜெட் விலை போன்களுக்கு சிறப்பு சலுகை! மேலும் பல..! – அமேசான் Great Republic Day Sale

இந்தியாவில் 26ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில் பிரபல அமேசான் நிறுவனம் Republic Day Sale ஐ அறிவித்துள்ளது.

இந்தியாவில் ஆன்லைனில் பொருட்கள் விற்கும் அமேசான், ப்ளிப்கார் உள்ளிட்ட ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் அவ்வபோது விழாக்கால விற்பனை, சீசன் விற்பனை போன்றவற்றில் சலுகை விலையில் பொருட்களை விற்று வருகின்றன. இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு அமேசான் நிறுவனம் க்ரேட் ரிபப்ளிக் டே விற்பனையை தொடங்க உள்ளது.

இந்த சுதந்திர தின விற்பனையில் கடந்த ஆண்டில் அமேசானில் அதிகம் விற்பனையான மொபைல் ப்ராண்டுகளான எம்ஐ9, எம்ஐ9 பவர் உள்ளிட்ட மொபைல் மாடல்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுகின்றன. மேலும் புதிதாக வெளியாகும் சாம்சங் மாடல்களான கேல்க்ஸி எம்31, ஒன் ப்ளஸ் 8டி ஆகிய மாடல்களுக்கு சிறப்பு விலை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர அமேசான் ஐசிஐசிஐ க்ரெடிட் கார்டு மூலம் பொருட்கள் வாங்கினாலோ, கோல்டன் பாஸ் பெற்று பொருட்கள் வாங்கினாலோ அளிக்கப்படும் சிறப்பு சலுகைகளும் உண்டு. இதுதவிர மாதாந்திர மளிகை பொருட்கள் வாங்கும் க்ரோசெரியிலும் குறிப்பிட்ட சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.