வியாழன், 29 பிப்ரவரி 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 4 ஆகஸ்ட் 2018 (15:43 IST)

காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகாவின் உபரிநீரை பெறுவது போல தற்போது தமிழகம் உள்ளது

கரூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் செ.நல்லசாமி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியபோது, நடப்பாண்டில் பயன்பாடு இல்லாமல், 8 டி.எம்.சி தண்ணீர் கடலில் தேவையில்லாமல் கலந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் எங்களை பொறுத்தவரை 20 டி.எம்.சி தண்ணீர் காவிரி நீர் தேவையில்லாமல் கடலில் கலக்கின்றது. இதற்கு காரணம் தவறான தீர்ப்பு தான், ஆகவே, தினந்தோறும் நீர் பங்கீடு முறை தான் சாத்தியம் என்ற அவர்,தீர்ப்பின் விகிதாச்சாரம் அடிப்படையில், தினந்தோறும் தமிழ்நாட்டிற்கும், புதுச்சேரிக்கும் தேவையான தண்ணீர் மேட்டூர் அணையில் சேமித்திருந்தால், மாதாந்திர தீர்ப்பு இருக்கின்ற அடிப்படையில் இதற்கான சாத்தியம் இல்லை, ஆகவே, தமிழ்நாடு, பாண்டிச்சேரி ஆகிய இரு மாநில அரசுகளுக்கு தேவையான காவிரி நீரை  கர்நாடகா அரசு அந்த இரு மாநில நீரை தேக்குகின்றது. இனிமேல், கபிணி அணையிலும், கே.ஆர்.எஸ் அணையிலும் நீர் திறக்கவில்லை என்றால் அணைகள் உடையும், ஆகவே, அணைகளை பாதுகாக்க வேண்டி தான் அந்த காவிரி நீரை திறந்து விட்டுள்ளார்கள்.

ஆனால் தமிழகத்தில் அணை கட்ட முடியாது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சொல்லி இருக்கின்றாரே, என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அணைகள் கட்ட முடியாது என்று சொல்ல முடியாது. ஏற்கனவே தமிழகத்தில் ஏரி, குளம், பண்ணை குட்டை உள்ளிட்ட பகுதிகளில் நன்கு நீர் தேங்கி இருக்கும் அப்போது நிலத்தினை அபகரித்து இருக்க மாட்டார்கள். மேலும், 1934 க்கு முன்னர், மேட்டூர் அணை கட்டுவதற்கு முன்னர்,. வரத்து கால்வாய் இருந்தது. ஆகவே, கர்நாடகாவிலிருந்து வந்த நீர், ஏரி, குளம், குட்டை, பண்ணை குட்டைகளை நிரப்பி விடுவார்கள். விளை நிலங்களுக்கும் பாய்ச்சி விடுவார்கள். ஆகவே, மேட்டூர் அணை கட்டிய பின்னர் ஏரி, பண்ணை குட்டை, குளம் ஆகியவற்றைகளை மறந்து விட்டோம், நீர்நிலைகளை அபகரித்து விட்டனர் என்றார் நல்லசாமி.

மேலும் மக்களுக்குள் குடிமராமத்துப் பணிகளை, அரசு பொதுப்பணித்துறை அதிகாரிகளை கொண்டு வந்தனர். ஆகவே, தமிழ்நாட்டில் குடிமராமத்து பணிகள் என்ற சொல், கொச்சைபடுத்தப்படுகின்றது என்றார்.

வீடியோவைக் காண

சி.ஆனந்தகுமார்