வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 24 ஜூன் 2019 (13:23 IST)

திருடனையும் விட்டுவைக்காத ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷ்டி: ஜார்கண்ட் மக்களின் மதவாதம்

ஜார்க்கண்டில் சிக்கிய திருடனை, முஸ்லிம் என்பதால் ஜெய் ஸ்ரீராம் என்று கூறச் சொல்லி தாக்கிய கும்பலைச் சேர்ந்தவர் போலீஸில் கைது.

இந்தியாவில் தற்போது சிறுபான்மையினர் மீதான மத வெறி தாக்குதல் அதிகரித்து கொண்டு வருகிறது. முக்கியமாக தலித்துகளின் மீதும், முஸ்லீம்கள் மீதும் மதத்தின் பெயரால் தாக்குதல் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது.

இந்நிலையில் தற்போது ஜார்கெண்ட் மாநிலத்தில் சிக்கிய திருடன் இஸ்லாமியர் என்பதால், ஒரு கும்பல் ஜெய் ஸ்ரீராம் என கூறச் சொல்லி தாக்கியுள்ள சம்பவம் சிறுபான்மையினர் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கெண்ட் மாநிலம் ஹர்ஷவான் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்திற்குள், ஒரு கும்பல் திருடவந்துள்ளது. அந்த கும்பலை, அப்பகுதியிலுள்ள பொது மக்கள் துரத்திபிடித்த போது, அக்கும்பலைச் சேர்ந்த ஒருவர் மட்டும் அகப்பட்டு கொண்டார்.

அவரின் பெயர் டேப்ரெஷ் அன்சாரி. 24 வயதுடைய அவரை திருட முயன்றதற்காக அப்பகுதி மக்கள் அவரை கட்டிவைத்து அடித்தனர். பின்பு இத்தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமத்தித்தனர்.

ஆனால் அன்சாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன்பின்பு அன்சாரி தாக்கப்படும்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

அந்த வீடியோவில் ஒருவர், அன்சாரியை ‘ஜெய் ஸ்ரீராம்’ என கூறச் சொல்லி அடிக்கின்றார். இதன் பின்பு அந்த வீடியோவிலிருந்த ஆதாரத்தை கொண்டு காவல்துறை அந்நபரை கைது செய்துள்ளது.

அகப்பட்டவர் திருடன் என்பதை தாண்டி, அவர் ஒரு இஸ்லாமியர் என்பதால் மத வெறியோடு தாக்கியுள்ள சம்பவம், இந்தியாவில் சிறுபான்மையினரின் மீதுள்ள வன்மம் அதிகரித்து வருவதை உறுதி செய்துள்ளது.

மேலும் அன்சரியை தாக்கிய போது எடுத்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் பல்ர் பகிர்ந்துவருவதோடு, அதற்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.