வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 30 டிசம்பர் 2022 (18:59 IST)

டெல்லியில் கட்டுமான பணிகளுக்கு திடீர் தடை: என்ன காரணம்?

apartment
டெல்லியில் கட்டுமான பணிகளுக்கு திடீரென தடை விதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
டெல்லி மாநில அரசு இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் காற்றின் தரம் மோசமாவதை தடுப்பதற்காக கட்டுமானம் மற்றும் இடிப்பு பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றின் தரம் தற்போது மோசமடைந்து உள்ளதாகவும் வானிலை மற்றும் தர மதிப்பீடு செய்ததன் அடிப்படையில் இந்த தடை விதித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
டெல்லி என் சி ஆர் பகுதி முழுவதும் அத்தியாவசிய திட்டங்கள் தவிர மற்ற அனைத்து கட்டுமான மற்றும் இடிப்பு பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva