புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By mahendran
Last Modified: திங்கள், 26 ஜூலை 2021 (15:58 IST)

எந்த பதவியும் கேட்கமாட்டேன்… எடியூரப்பா பதில்!

கர்நாடகா முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ள எடியூரப்பா கட்சிக்காக எந்த பதவியும் எதிர்பார்க்காமல் உழைப்பேன் எனக் கூறியுள்ளார்.

கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சி நிறைவடைய இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில் கர்நாடக பாஜகவில் நிலவும் உட்கட்சி மோதல் காரணமாக எடியூரப்பா பதவி விலக கோரிக்கை வலுத்தது. பாஜகவில் 75 வயதுக்கு மேற்பட்ட தலைவர்களுக்கு ஓய்வளிக்கப்படும். ஆனால் அப்போதே 76 வயதாகிருந்த எடியூரப்பாவுக்கு இந்த பதவி வழங்கப்பட்டது சர்ச்சைகளைக் கிளப்பியது.

ஆனால் இரண்டு ஆண்டுகள் மட்டுமே பதவி என்ற நிபந்தனையோடுதான் வழங்கப்பட்டது. கர்நாடக முதல்வர் பதவியை எடியூரப்பா  ராஜினாமா செய்ய முன் வந்துள்ளார். இன்று மாலை 4 மணிக்கு ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை  எடியூரப்பா வழங்க உள்ளார்.

இதுகுறித்து எடியூரப்பா கூறியுள்ளாதவது ‘டெல்லியில் இருந்து அழுத்தம் கொடுக்கப்படவில்லை. கட்சியில் மற்றவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதாலேயே நான் பதவி விலகுகிறேன். ஆளுநர் உள்ளிட்ட எந்த பதவியையும் நான் கேட்கமாட்டேன். கட்சிக்காக நான் கடைசி வரை உழைப்பேன்’ எனக் கூறியுள்ளார்.