1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 19 ஜனவரி 2019 (16:06 IST)

கல்லூரி மாணவி கர்ப்பம் : பிரசவத்தின் போது நேர்ந்த சோகம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புங்கனை பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ( 17) . அருகில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு படித்து வந்தார்
பொங்கல் பண்டிகை என்பதால் இவரும். இவரது தாயும் ஊத்தங்கரைக்கு பேருந்தில் சென்றுள்ளனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக இளம்பெண்ணுக்கு வலிப்புநோய் ஏற்பட்டுள்ளது. 
 
இதனையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த போது அவர் கர்ப்பமாக இருப்பது உறுதியானது. அதனால்  தாய் உட்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
 
பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. 
 
மேலும் இளம் பெண்ணில் உடல் நிலையும் மோசமானதால் அவரை தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அங்கு இளம் பெண் இறந்தார். 
 
தன் மகள் கர்ப்பமானதற்கு லாரி ஓட்டுநர் தமிழரசன் என்பவர் தான் காரணம் என்று இளம் பெண்ணின் தாய் போலிஸில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீஸார் தமிழரசனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக தகவல் வெளியாகிறது.