மணமகன் ஊர்வலத்தில் ஏற்பட்ட விபத்து: தாலி கட்டுவதற்கு சில மணி நேரத்திற்கு முன் உயிரிழப்பு..!
மணமகன் ஊர்வலத்தில் நடந்த விபத்து காரணமாக தாலி கட்டுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு மணமகன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இளைஞர் ஒருவருக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணமகனை ஊர்வலத்தில் காரில் அழைத்துச் சென்றனர். அப்போது அந்த கார் திடீரென விபத்துக்குள்ளாகிய நிலையில் மணமகன் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்
இந்த காரின் எரிவாயு தொட்டியில் திடீரென தீப்பிடித்ததால் கார் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் மணமகன் உள்பட நான்கு பேர் தீக்காயங்களால் இருந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் தாலி கட்டுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் மணமகன் பரிதாபமாக உயிரிழந்ததை அடுத்து மணமகள் குடும்பத்தினர் சோகமாக இருந்தனர் என்றும் திருமணம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது
Edited by Siva