ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 7 டிசம்பர் 2017 (19:43 IST)

கடைசி நிமிடத்தில் காதலுடன் ஓட்டம் பிடித்த மணமகள்

திருமணத்தில் கடைசி நிமிடத்தில் மணமகள் வேண்டாம் என மணமகள் காதலுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் மடிகொண்டூர் மந்தல் அடுத்த சரிபுரம் கிராமத்தில் திருமணம் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. கிறிஸ்துவ திருமணம் என்பதால் தேவாலயத்தில் நடைபெற்றுள்ளது. திருமணத்தில் மணமகன் மற்றும் மணமகளின் கைகள் ஒன்றாக இணைக்கப்பட்டது.
 
பாதிரியார் மணமகனிடம், மணமகளை மனைவியாக ஏற்றுக்கொள்ள சம்மதமா என்று கேட்டபோது மணமகன் சம்மதம் தெரிவித்தார். மணமகளிடம் கேட்டபோது சற்று நேரம் அமைதி காத்து, தனக்கு விருப்பமில்லை என கூறியுள்ளார். இதையடுத்து கூட்டத்தில் இருந்த தன் காதலனை அழைத்த மணமகள் அங்கிருந்து காதலுடன் ஓட்டம் பிடித்தார். 
 
இதையடுத்து மணமகன் மற்றும் மணமகள் இருவீட்டாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.