திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 6 டிசம்பர் 2017 (17:32 IST)

பிரபல தொகுப்பாளினி மணிமேகலை திடீர் காதல் திருமணம்

பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளர் மணிமேகலை தன்னுடைய தந்தை சம்மதிக்காததால் திடீரென இன்று காதல் திருமணம்  செய்துள்ளார். இதனை தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளர் மணிமேகலை குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி தனது காதலர் ஹுசைன் என்பவரை  பதிவுத் திருமணம் செய்துக் கொண்டுள்ளார். பிரபல தொலைக்காட்சித் விஜே-வாக வேலையாற்றி வருபவர் மணிமேகலை. இவர்  பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவருக்கும் ஹுசைன் என்பவருக்கும் நீணட காலமாக காதலித்து வந்த  நிலையில், இவர்களின் திருமணத்துக்கு மணிமேகலையின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில் இன்று மணிமேகலை குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி ஹுசைனை பதிவுத் திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.  இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிந்துள்ளார். அதில் இன்று எனக்கும் ஹூசைனுக்கும் பதுவுத் திருமணம்  நடந்துள்ளது. என்னால் என் தந்தையை இந்த விஷயத்தில் என்னால் சமாதானம் செய்ய இயலவில்லை. நிலைமை எனது கட்டுப்பாட்டை மீறிச் சென்றதால்  இந்த முடிவுக்கு நாங்கள் வந்தோம். என தந்தையும் விரைவில் புரிந்துக் கொள்வார். காதலுக்கு மதம் இல்லை. நான்  ஹூசைனை காதலிக்கிறேன். ஸ்ரீராமஜெயம். அல்லா ஹூ அக்பர் என பதிவிட்டுள்ளார்.