1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 14 மார்ச் 2024 (08:26 IST)

திருமணத்திற்கு வீடியோ எடுக்க வந்தவருடன் ஓடிப்போன மணமகள்.. குடும்பத்தினர் அதிர்ச்சி..!

Marriage
பீகார் மாநிலத்தில் திருமணத்திற்கு முந்தைய நாள் மணமகள் திருமணத்திற்கு வீடியோ எடுக்க வந்தவருடன் ஓடிப்போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூர் என்ற பகுதியில் லட்சுமண ராய் என்பவர் தனது மகளுக்கு வரன் பார்த்து திருமண ஏற்பாடுகள் செய்திருந்தார். இந்த திருமணத்திற்கு வீடியோ எடுக்க தனது ஊரைச் சேர்ந்த கோலு குமார் என்பவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அடிக்கடி அவர் வீட்டுக்கு வந்து சென்றுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் திடீரென அந்த வீட்டின் மணமகளுடன் வீடியோகிராபருக்கு பழக்கம் ஏற்பட்டதை அடுத்து திருமணத்திற்கு முந்தைய நாள் இருவரும் திடீரென மாயமாகிவிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த மணமகளின் தந்தை வீடியோகிராபர் வீட்டுக்கு சென்று அவரிடம் தந்தையிடம் கேட்டபோது தனக்கு எதுவும் தெரியாது என்று அவர் கூறிவிட்டார்.

இதனை அடுத்து வீடியோகிராபர் கோலு குமார் தனது மகளை கடத்தி சென்று விட்டதாக லக்ஷ்மண ராய் காவல்துறையில் புகார் அளித்த நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் இருவரையும் தேடி வருகின்றனர். திருமணத்திற்கு வீடியோ எடுக்க வந்தவர் திடீரென மணமகளையே கூட்டிக் கொண்டு சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Edited by Siva