1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 13 மே 2022 (09:26 IST)

திருமணத்தின்போது, மணமகனின் மடியிலேயே விழுந்து உயிரிழந்த மணமகள்!

bride1
திருமணத்தின்போது, மணமகனின் மடியிலேயே விழுந்து உயிரிழந்த மணமகள்!
தாலி கட்டுவதற்கு சில நிமிடங்களுக்கு மணமகன் மடியிலேயே மணமகள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 22வயது ஸ்ருஜானா என்பவருக்கும் சிவாஜி என்பவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. தாலி கட்ட சில நிமிடங்கள் இருந்த நிலையில் திடீரென மணமகனின் மடியிலேயே ஸ்ருஜானா உயிரிழந்தார் 
 
இதுகுறித்து விசாரணை செய்த போது ஸ்ருஜானா திருமணத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் விஷம் குடித்ததாக தெரிகிறது 
 
தாலி கட்டுவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன் திடீரென மணமகன் சிவாஜியின் மடியிலேயே மணமகள் ஸ்ருஜானா உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
இதனை அடுத்து ஸ்ருஜானாவுக்கு விருப்பம் இல்லாமலேயே இந்த திருமணம் நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்