1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (10:17 IST)

இளம் பெண்ணுக்கு கொலை மிரட்டல்... மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தாய் மகனுடன் வந்து புகார்!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கனிமொழி இவர் இன்று கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் ஒன்றினை அளித்தார்.
 
அந்த புகாரில் பண்ருட்டியை சேர்ந்த வாலிபர் ஒருவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதாகவும் அதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்து இந்த வழக்கு விசாரணை தற்போது நடைபெற்று வரும் நிலையில் எனக்கு குழந்தை பிறந்துள்ளது. 
 
இந்நிலையில்  என்னை ஏமாற்றிய வாலிபருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து கொள்வதாக தெரியவந்துள்ளது. இது குறித்து கேட்டால் கொலை மிரட்டல் விடுத்ததாக அந்த மனுவில் கனிமொழி தெரிவித்துள்ளார்.