வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 12 செப்டம்பர் 2024 (09:56 IST)

பிரதமா் மோடி கூட்டத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கு: 4 பேரின் தண்டனை குறைப்பு..!

பிரதமர் மோடி கூட்டத்தில் குண்டு வைத்த 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த தண்டனை 30 ஆண்டுகள் சிறை தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் உச்சத்தில் இருந்தபோது அப்போதைய குஜராத் முதல்வர் மோடி, பாட்னா நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது பாட்னாவில் ரயில் நிலையம் உள்பட பத்து இடங்களில் வெடிகுண்டுகள் வெடித்தன.

இதில் பயங்கரவாத அமைப்பு ஒன்று ஈடுபட்டது என்று தெரியவந்ததை அடுத்து ஒன்பது பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து கடந்த 2021 ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் 3 பேருக்கு ஆயுள் தண்டனையும் இரண்டு பேருக்கு பத்தாண்டு சிறை தண்டனையும் ஒருவருக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

 இந்த நிலையில் இந்த தண்டனையை குறைக்க கோரி பாட்னா உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பயங்கரவாதிகளின் தண்டனை 30 ஆண்டுகள் சிறை தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. மற்ற குற்றவாளிகளுக்கான தண்டனை குறைக்க முடியாது என்று நீதிபதி அறிவித்துள்ளார்.

Edited by Siva