திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 29 ஆகஸ்ட் 2024 (14:07 IST)

ஒரே நேரத்தில் ஈரோடு, திருச்சி, நெல்லை, சேலம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பெரும் பரபரப்பு

bomb threat
ஒரே நேரத்தில்  ஈரோடு, திருச்சி, நெல்லை,  ஆகிய நகரில் உள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 ஈரோடு, திருச்சி, நெல்லை, ஆகிய நான்கு நகரங்களில் ஒரே நிர்வாகத்திற்கு கீழ் இயங்கி வரும் தி இந்தியன் பப்ளிக் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் மூலம் நான்கு நகரங்களில் உள்ள பள்ளிகளில் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

ஒரே நிர்வாகத்தின் கீழ் உள்ள பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்ததாகவும் இதனை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெடிகுண்டு மிரட்டல் வந்த பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. இதுவரை சோதனை செய்ததில் எந்த வெடிகுண்டும் இல்லை என்பதை அடுத்து இது வெறும் மிரட்டல் தான் என்பது தெரிய வந்துள்ளதாகவும்,  இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்த மின்னஞ்சல் அனுப்பியது யார் என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தி இந்தியன் பப்ளிக் ஸ்கூல் என்ற ஒரே நிர்வாகத்தின் கீழ் நடக்கும் நான்கு நகரங்களில் உள்ள பள்ளிகளுக்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பதை அடுத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Edited by Mahendran