பிரதமர் ஆவேன் என்று நினைத்ததில்லை – அக்‌ஷய்குமாரிடம் மோடி கலகல !

Last Updated: புதன், 24 ஏப்ரல் 2019 (10:58 IST)
பிரதமர் மோடி தனது டெல்லி இல்லத்தில் நடிகர் அக்‌ஷய்குமாருக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் தான் பிரதமாராவேன் என்று நினைத்ததில்லை எனக் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் நேற்றோடு 3 கட்டத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்நிலயில் பிரதமர் மோடி டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் நடிகரும் பாஜக ஆதரவாளருமான அக்‌ஷய் குமாருக்கு நேர்காணல் ஒன்றை அளித்துள்ளார்.

இந்த நேர்காணலில் அரசியல் விஷயங்கள் கம்மியாகவும்  மோடியைப் பற்றிய சொந்த விஷயங்கள் அதிகமாகவும் இடம்பெற்றுள்ளன. இதில் அக்‌ஷய் குமார் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு மோடி நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார். அதில் நீங்கள் பிரதமர் ஆவீர்கள் என்று நினைத்ததுண்டா என்ற கேள்விக்கு மோடி,’ஒருபோதும் நான் பிரதமர் ஆவேன் என்று நினைக்கவில்லை’ எனக் கூறினார்.

மற்றொருக் கேள்வியான நீங்கள் ஏன் அரசியல் நகைச்சுவையாகப் பேசுவதில்லை எனக் கேட்டபோது ‘ நான் பேசும் போது எனது வார்த்தைகள் தவறாக அர்த்தம் கொள்ளப்படுமோ என்ற அச்சத்தில்தான் தான் அவ்வாறு பேசுவதில்லை’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :