புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 24 ஏப்ரல் 2019 (09:32 IST)

இந்த நாள் முதல் உயரும் பெட்ரோல், டீசல் விலை...? எவ்வளவு தெரியுமா??

வாக்கு எண்ணிக்கை நாள்முதல் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்த மோடி அரசு திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் ஊடக பொறுப்பாளர் ரந்தீப் கர்ஜேவாலா தெரிவித்துள்ளார். 
 
கடந்த 6 மாதங்களாக கச்சா எண்ணெய்யின் விலை உயர்ந்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்தது. இதை தவைர்த்து அமெரிக்கா ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தத்தில் வெளியேறியதிலிருந்து அந்நாட்டிடம் இருந்து இறக்குமதியை மேற்கொள்ளக்கூடாது என இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில்,  காங்கிரஸ் கட்சியின் ஊடக பொறுப்பாளர் ரந்தீப் கர்ஜேவாலா கூறியதாவது, மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்குவதற்காக, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 23 ஆம் தேதி வரை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வேண்டாம் என மோடி உத்தரவிட்டுள்ளார்.
 
மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நாளின் போது மாலையில் பெட்ரோல், டீசல் விலையை ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்த்தும் எண்ணத்தில் மத்திய அரசு உள்ளது. எல்லா விஷயத்தையும் துணிச்சலாக பேசும் மோடி, பெட்ரோல், டீசல் விலை உயர்வு விவகாரத்தில் மௌனம் காப்பது ஏன்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.